எந்த ஆவணமும் இல்லாமல் PF சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்…! எப்படி தெரியுமா…?

Default Image

எந்த ஆவணமும் இல்லாமல் PF சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். 

EPFO இன் சமீபத்திய அறிவிப்பின்படி, ஊழியர்கள் எந்த ஆவணமும் இல்லாமல் PF சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. EPFO வின் அறிவிப்பின் படி, முறைப்படி அல்லது தேவையான ஆவணங்களில் தளர்வு அளிப்பதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக பணம் பெற முடியும்.  மேலும், ஊழியர் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த PF தொகையை வழங்க முடியும்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு பொறுப்பான அதிகாரி (ACC-ASD for Head Office), பயனாளரிடம் இருந்து, மருத்துவத்திற்கு தேவையான தொகைக்கான விண்ணப்பத்தை பெற்றவுடன், அதற்கு அடுத்த வேலைநாளில் பணம் வழங்கப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நோய்களில், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசரகாலத்தில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பல நேரங்களில் கட்டாயமாகிறது. மேலும் இதுபோன்ற சூழ்நிலைகளில் சில நேரங்களில் மருத்துவமனையிலிருந்து எந்த உதவி தொகையையும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

அவசரகாலத்தில் மருத்துவமனையில் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து தேவையான தொகையை பெற முடியாத இடங்களில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கான மேம்பட்ட வசதியை சீராக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈபிஎஃப்ஓ-வில் ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது, அதில் ஒரு நோயாளி ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த ஆணையம் மருத்துவ பில்கள் திருப்பிச் செலுத்துவதற்கான விதிகளில் தளர்வு வழங்குவது என்பது, நோயாளிக்கு தொகையை வழங்கவேண்டிய கடினமான சூழல் என்று கருதினால், முன்கூட்டியே பணம் கொடுக்க முடியும்.

அதுபோல், மருத்துவமனையில் முன்கூட்டியே பணம் செலுத்திய பிறகு, மருத்துவமனை மற்றும் நோயாளியின் விவரங்களுடன் மதிப்பீடு இல்லாமல் அவரிடமிருந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்தோ கோரிக்கை கடிதத்தை சமர்ப்பிக்குமாறு ஊழியரிடம் கேட்கப்படும்.

முறைப்படி அல்லது தேவையான ஆவணங்களில் தளர்வு அளிப்பதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மொத்த மருத்துவ முன்பணம், உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும், ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் தேவைப்படும் பட்சத்தில், விதிகளின்படி வழங்கப்படுகிறது.

இவ்வாறு மருத்துவ தேவைக்காக PF பணத்தில் முன்கூட்டியே பணம் கொடுக்கப்படும் பட்சத்தில், ஊழியரின் சம்பள கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்தப்படும். அதன் பிறகு, பணியாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 45 நாட்களுக்குள் பில்லை சமர்ப்பிக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy