இன்று முதல் ஜன்தன் கணக்குகளில் ரூ.500 பெற்று கொள்ளலாம் – மத்திய அரசு.!
பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 2-வது தவணையாக மே மாதத்துக்கான தொகை ரூ.500 இன்று முதல் 5 நாட்களில் செலுத்தப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என மத்திய அரசு மே 17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீடித்து உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உதவும் வகையில் கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை அறிவித்தார். அதில், பெண்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு அவர்களுடைய ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி பெண்களின் ஜன்தன் கணக்குகளில் முதல் தவணையாக ஏப்ரல் மாதம் தலா ரூ.500 செலுத்தப்பட்டது. இந்நிலையில், 2-வது தவணையாக மே மாதத்துக்கான தொகை ரூ.500 இன்று முதல் 5 நாட்களில் செலுத்தப்படுகிறது.
0 மற்றும் 1 முடியும் என்ற வங்கி கணக்கு எண் கொண்டவர்கள் இன்றும், வங்கி கணக்கு எண் 2 மற்றும் 3 என முடிந்தால் நாளையும் , வங்கி கணக்கு எண் 4 மற்றும் 5 என முடிந்தால் 6-ம் தேதியும், வங்கி கணக்கு எண் 6 அல்லது 7 என முடிந்தால் 8-ம் தேதியும், வங்கி கணக்கு எண் 8 அல்லது 9 என முடிந்தால் 11-ம் தேதியும் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.