நீங்கள் என்னை தொந்தரவு செய்யலாம், ஆனால் என் மனதை உடைக்க முடியாது – சிசோடியா ட்வீட்
சிறைவாசம் தனக்கு சிரமங்களை ஏற்படுத்தலாம், ஆனால் மனதை உடைக்க முடியாது என மணீஷ் சிசோடியா பதிவு.
மணீஷ் சிசோடியா கைது:
2021-22ம் ஆண்டிற்கான டெல்லி மதுபான கொள்கை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக கூறப்படும் தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை பிப்.26 அன்று மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து, திகார் சிறையில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
அமலாக்கத்துறை காவலில் சிசோடியா:
கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் சிசோடியாவிடம் விசாரணை நடத்தினர். இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர் நேற்று முன்தினம் இந்த வார தொடக்கத்தில் அமலாக்கத்துறையினரும் மணீஷ் சிசோடியவை கைது செய்தனர். சிசோடியவை அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்தனர். இதன்பின் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிசோடியா ட்வீட்:
இந்த நிலையில், என்னை தொந்தரவு செய்யலாம், ஆனால் என் மனதை உடைக்க முடியாது என திஹாரில் இருந்து டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் செய்தி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மணீஷ் சிசோடியா ட்விட்டர் பதிவில், நீங்கள் சிறையில் அடைப்பதன் மூலம் என்னை தொந்தரவு செய்யலாம், ஆனால் உங்களால் என் மனதை உடைக்க முடியாது.
மனது உடைந்துவிடவில்லை:
ஆங்கிலேயர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குத் தொல்லை கொடுத்தனர், ஆனால் அவர்களின் மனது உடைந்துவிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிசோடியா 7 நாள் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பப்பட்டதை அடுத்து இது செய்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.