நீங்கள் விவசாயிகளின் ஆதரவாளர் அல்ல, நீங்கள் வாக்குகளின் அனுதாபி – பிரியங்கா காந்தி
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் வார்த்தைகள் வெற்றுத்தனம், நீங்கள் விவசாயிகளின் ஆதரவாளர் அல்ல, நீங்கள் வாக்குகளின் அனுதாபி என்று பிரியங்கா காந்தி ட்விட் செய்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது.
இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களின் இருக்கையை முற்றுகையிட்டும், முழக்கத்தையும் எழுப்பி வந்தனர். இதன்காரணமாக, நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, 12 மணிக்கு பின் மீண்டும் தொடங்கிய மக்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வேளாண் சட்டம் குறித்து விவாதிக்காமல் ரத்து செய்தது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், பிரியங்கா காந்தி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லியில் போராட்டத்தின் போது, 700 விவசாயிகள் தியாகிகளானார்கள், அவர்களின் தியாகம் இன்று பாராளுமன்றத்தில் பேசப்படவில்லை, அஞ்சலி செலுத்தி மதிக்கப்படவில்லை.
எண்ணற்ற விவசாயிகளின் போராட்டமும் தியாகமும் நமக்கு அ சுதந்திரத்தைக் கொடுத்தது. விவசாயிகள் சட்டங்கள், MSP கோரிக்கை மற்றும் லக்கிம்பூர் படுகொலைகள் பற்றி விவாதிக்கப்படாமல் பாராளுமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன. பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் வார்த்தைகள் வெற்றுத்தனம், நீங்கள் விவசாயிகளின் ஆதரவாளர் அல்ல, நீங்கள் வாக்குகளின் அனுதாபி.’ என பதிவிட்டுள்ளார்.
किसान क़ानूनों, MSP की माँग और लखीमपुर नरसंहार की चर्चा किए बगैर संसद की कार्यवाही की गयी। @narendramodi जी आपकी बातें खोखली हैं, आप किसानों के हमदर्द नहीं हैं, आप वोटों के हमदर्द हैं। 2/2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 29, 2021