ராமர் கோயில் விழாவிற்கு ஆலோசனை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத்..அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடி.?

Default Image

பிரதமர் மோடியும் கலந்து கொள்ளவுள்ள ஆகஸ்ட்-5 விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான திட்டமிடப்பட்ட பிரம்மாண்டமான விழாவுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் இருக்கிறார். ஆகஸ்ட்-5 இந்த விழாவின் அரங்கமாக இருக்கும் ராமர் ஜென்மபூமி வளாகத்திற்கு முதலமைச்சர் தனது அயோத்தி சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கினார். ராம் ஜென்மபூமி தளத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமரை பிரார்த்தனை செய்தார்.

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் கோவில் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. இதனால் இன்று விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து யோகி ஆதித்யநாத் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்களை ஆலோசனை நடத்தினார். ராம் ஜென்மபூமி வளாகத்திற்குள் “பூமி பூஜன்” நடைபெறும் விழாவில்  மொத்தம் 150 முதல் 200 பேர் வரக்கூடும் மமேலும் கொரோனா வைரஸ் காரணமாக தொலைதூர விதிமுறைகளுடன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1988-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அசல் வடிவமைப்போடு ஒப்பிடும்போது ​​கோயிலின் உயரம் குறைந்தது 20 அடி – 161 அடி உயரம் என்று கோயில் வடிவமைப்பின் பொறுப்பான நிறுவனம் கூறியுள்ளது. வடிவமைப்பில் இரண்டு மண்டபங்கள் அல்லது பெவிலியன்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்று கோயில் கட்டிடக் கலைஞர் தெரிவித்தார்.

ஆகஸ்ட்-5 ம் தேதி நடைபெறும் விழாவுக்கு முன்னதாக மூன்று நாள் பெரிய வேத சடங்குகள் நடைபெறும் இது பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைக்க உள்ளார் என தகவல் வெளியகியுள்ளது. அயோத்தி முழுவதும் பெரிய அளவிலான சி.சி.டி.வி திரைகள் வைக்கப்படும் இதனால் பக்தர்கள் நிகழ்ச்சியைக் காணலாம் என்று கோயிலுடன் பணிபுரிந்த ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்