ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பாக ஆலோசனை செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி செல்கிறார்.
உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கவும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதனால், கடந்த ஜூன் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிகள் வருகின்ற 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த, பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கலந்துகொள்ள உள்ளனர். இந்தநிலையில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பான ஏற்பாடுகள், கட்டுமானப் பணிகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசிக்க இன்று அயோத்தி செல்கிறார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…