ஹத்ரஸ் பாலியல் வழக்கு..! சிறப்பு விசாரணை குழு அமைத்து யோகி ஆதித்யநாத் உத்தரவு..!
ஹத்ரஸ் பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்த்துள்ளார். 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
மேலும், அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு வெட்டப்பட்ட நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர்,டெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடற்கூறு ஆய்வுக்குப் பின் இன்று அதிகாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இளம்பெண் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல விடாமல் காவல்துறையினரே அவசரஅவசரமாக இறுதி சடங்கை செய்து தகனம் செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.