உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா பகுதியில் சொத்து தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ப்ரியங்கா நேற்று சென்ற நிலையில் சோன்பத்ரா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனை அடுத்து மறியலில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு மிர்சாபூர் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனை சென்று சந்தித்தார். பின்னர் பேசிய அவர், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநில அரசு மக்களை காக்க தவறிவிட்டதாவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…