2வது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார்..!

2வது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 255 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது.
25ம் தேதி பதவியேற்பு:
இந்நிலையில்,உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார். லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். டெல்லியில் யோகி ஆதித்யநாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை நேரில் சென்று பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், யோகி ஆதித்யநாத் புதிய அமைச்சரவை 45-க்கும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025