3 ஆண்டுகள் நிறைவு – யோகி ஆதித்யநாத் சாதனை.!
கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பிடித்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. யோகி ஆதித்யநாத் 2017, மார்ச் 19ல் உத்தரபிரதேசத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் யோகி பொறுப்பேற்ற ஓராண்டில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. பின்னர் தோல்வியிலிருந்து பாடம் கற்று கொண்டதாக யோகி தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், 62 தொகுதிகளை பாஜக கைபற்றியது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி யோகி தனது 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதற்கு முன் பாஜக முதல்வர்களாக இருந்த கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் முழுமையாக 3 ஆண்டுகளை முதல்வராக இருந்து நிறைவு செய்யவில்லை. இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் 3 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் பாஜக முதல்வர் என்ற சாதனையை யோகி பெறுகிறார்.