உத்திர பிரதேச மாநிலத்தில அயோத்தியில் சுமார் 221 மீ உயரம் உடைய ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் உள்ளது அயோத்தி இது ராமரின் பிறப்பபிடமாக போற்றப்படுகிறது.இந்நிலையில் அங்கு கோயில் கட்டுவது தொடர்பாக நீண்ட நாள்களாக சர்ச்சை நீடித்து வருகிறது.இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் அங்கு கோவிலை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, போடப்பட்டது.இந்த வழக்கினனை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.வழக்கு நடந்து வரும் நிலையில் உத்திரபிரதேச மாநில முதல்வர் அயோத்தியில் பகபவான் ராமருக்கு மிக பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் ராமர் கோவில் விவகாரத்தில் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் உத்திர பிரதேச அரசின் முதன்மை செயலளாரான அவினாஸ் அவஸ்தி இது குறித்து தெரிவிக்கையில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் 221 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட இருக்கின்றது. மேலும் அமைக்கப்படும் ராமர் சிலையினுடைய பாதங்களுக்கு கீழ் 50 மீ பீடம் அதன் மேல் 151 மீ உயரத்தில் ஒரு முழுஉருவ வெண்கல சிலை மற்றும் 20 மீ., உயரத்திலான ஒரு குடை வடிவமைக்கப்பட இருக்கிறது.மேலும் ராமர் சிலைக்கு கீழே அமையும் அடித்தளத்தில் அயோத்தியின் வரலாறு மற்றும் ராமரின் ஜென்மபூமியின் பின்னணி குறித்த விவரங்களை உள்ளடக்கிய விளக்கமும்,ஒரு நவீன அருங்காட்சியகமும் மற்றும் விஷ்ணுவின் அனைத்து விதமான அவதாரங்களை குறித்த விரிவான விளக்கங்கள் இடம்பெறும். இவ்வாரு தெரிவித்த அவர் ராமர் சிலை அமைப்பதற்கான ஏற்ற இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண் மற்றும் காற்று ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறினார்.
DINASUVADU
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…