பஞ்சாபில் பட்டேல் சிலை என்றால்…உ.பியில் ராமர் சிலை அதும் மிக பெரியது…!! டார்கெட்டுடன் களமிரங்கும் பிஜபி..!!!

Default Image

உத்திர பிரதேச மாநிலத்தில அயோத்தியில் சுமார் 221 மீ  உயரம் உடைய ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் உள்ளது அயோத்தி இது ராமரின் பிறப்பபிடமாக போற்றப்படுகிறது.இந்நிலையில் அங்கு கோயில் கட்டுவது தொடர்பாக நீண்ட நாள்களாக சர்ச்சை நீடித்து வருகிறது.இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் அங்கு கோவிலை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, போடப்பட்டது.இந்த வழக்கினனை உச்ச நீதிமன்றம்  விசாரித்து வருகிறது.வழக்கு நடந்து வரும் நிலையில் உத்திரபிரதேச மாநில முதல்வர் அயோத்தியில் பகபவான் ராமருக்கு மிக பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் ராமர் கோவில் விவகாரத்தில் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் உத்திர பிரதேச அரசின் முதன்மை செயலளாரான அவினாஸ் அவஸ்தி இது குறித்து தெரிவிக்கையில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் 221 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட இருக்கின்றது. மேலும் அமைக்கப்படும் ராமர் சிலையினுடைய பாதங்களுக்கு கீழ் 50 மீ பீடம்  அதன் மேல் 151 மீ உயரத்தில் ஒரு முழுஉருவ வெண்கல சிலை மற்றும் 20 மீ., உயரத்திலான ஒரு குடை வடிவமைக்கப்பட இருக்கிறது.மேலும் ராமர் சிலைக்கு கீழே அமையும் அடித்தளத்தில் அயோத்தியின் வரலாறு மற்றும் ராமரின் ஜென்மபூமியின் பின்னணி குறித்த விவரங்களை உள்ளடக்கிய விளக்கமும்,ஒரு  நவீன அருங்காட்சியகமும் மற்றும் விஷ்ணுவின் அனைத்து விதமான அவதாரங்களை குறித்த விரிவான விளக்கங்கள் இடம்பெறும். இவ்வாரு தெரிவித்த அவர் ராமர் சிலை அமைப்பதற்கான ஏற்ற இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண் மற்றும் காற்று ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்