உத்திர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில முதல்வராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த, சாதனையை யோகி ஆதித்யநாத்(47) பெற்றுள்ளார். இவர் வரும் 19ம் தேதி வியாழக்கிழமையுடன் அவர் 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த மூன்று ஆண்டுகளில் உத்திர பிரதேசம் தனது இழந்த கவுரவத்தை மீண்டும் பெற்றுள்ளது என்றும், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களை எங்கள் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது என்றும், இதனால் மாநிலம் மக்கள் சிறந்த பயனடைகிறது. கடந்த ஆட்சி காலங்களில் உத்திரபிரதேச அரசு பரிதாபகரமான நிலையில் இருந்தது என்றும் மாநிலத்தின் வளர்ச்சி தடைப்பட்டது, சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். மேலும் தற்போது எங்கள் அரசு, சட்டத்தின் ஆட்சியை நிறுவியுள்ளது என்றும், குற்றங்கள் குறைந்துவிட்டன. இதன் காரணமாக பெரிய அளவில் முதலீடு மாநிலத்தில் வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தீ விபத்து ஏற்படுத்தியவர்கள், பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் கண்டிப்பாக சட்டத்தால் கையாளப்படுவார்கள் என்றும், ஜனநாயகத்தில் எதிர்ப்பு தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. ஆனால், வன்முறை இருக்க கூடாது. கொரோனா வைரஸ் பிரச்னையை சமாளிக்க, மாநில அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…