சூரத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி புதிய கின்னஸ் சாதனை படைத்தது என்று அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதியான இன்று உலகம் முழுவதும் ‘சர்வதேச யோகா தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சூரத்தின் டுமாஸ் பகுதியில் மாநில அளவிலான சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்டார்.
இதில் உரையாற்றிய அவர், குஜராத்தில், இன்று 72,000 இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 1.25 கோடி பேர் யோகா தின அமர்வில் இணைந்துள்ளனர். சூரத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி யோகாவை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினார் என்று கூறினார்.
மேலும், குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறுகையில், சூரத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் என்று கூறினார்.
இதற்கிடையில் சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் மாநில அளவிலான நிகழ்ச்சி சூரத்தில் முதல்வர் படேல் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…