சூரத் யோகா நிகழ்ச்சி புதிய கின்னஸ் சாதனை படைத்தது..! அமைச்சர் ஹர்ஷ் சங்கவி

Yoga Day event

சூரத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி புதிய கின்னஸ் சாதனை படைத்தது என்று அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதியான இன்று உலகம் முழுவதும் ‘சர்வதேச யோகா தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சூரத்தின் டுமாஸ் பகுதியில் மாநில அளவிலான சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்டார்.

இதில் உரையாற்றிய அவர், குஜராத்தில், இன்று 72,000 இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 1.25 கோடி பேர் யோகா தின அமர்வில் இணைந்துள்ளனர். சூரத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி யோகாவை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினார் என்று கூறினார்.

மேலும், குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறுகையில், சூரத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் என்று கூறினார்.

இதற்கிடையில் சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் மாநில அளவிலான நிகழ்ச்சி சூரத்தில் முதல்வர் படேல் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்