யெஸ் வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளது – நிர்மலா சீதாராமன்..!

தனியார் வங்கியான யெஸ் வங்கி அதிகமான வாரா கடன் கடன்களை டெபாசிட்கள் வழங்கியதால் தற்போது நிதிநெருக்கடியில் உள்ளது. இதைத் தொடர்ந்து யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
யெஸ் வங்கிகளை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ,யெஸ் வங்கியின் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்.
மேலும் உங்களின் பணம் பாதுகாப்பானது நான் இந்திய ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசிவருகிறேன். எந்தவொரு வாடிகையாளருக்கும் எந்த இழப்பும் ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் எனக்கு உறுதியளித்துள்ளார் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025