இன்று முதல் யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது.பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஈடுபட்டன. அந்த வகையில் பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் பெற்றது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் யெஸ் வங்கி கட்டுப்பாடுகள் நீங்குவதாக தெரிவித்தார்.மேலும் இன்று முதல் யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவித்தார்.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…