பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் மாட்டித் தவிக்கும் Yes Bank, கடந்த ஆண்டு ரூ.1,500 கோடி இழப்பை சந்தித்தது. இதன் காரணமாக அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இதனால், Yes Bank-யுடன் கூட்டு வைத்திருந்த PhonePe போன்ற செயலிகளும் பாதிப்படைந்துள்ளன.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு Yes Bank நிர்வாகம் செயல்படும் என அறிவித்தது. இதையடுத்து வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை Yes Bank-க்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் பயப்படவேண்டாம் என கூறிய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளது. பின்னர் ஏதேனும் அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் ரூ.5 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்த இந்த நடவடிக்கையால், ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்கள் அவசரம் காட்டியதால், சர்வர் முடங்கியது எனவும் ரூ.50,000 மேல் EMI கட்டுபவர்கள் பணம் செலுத்தும் நிறுவனத்திடம் ஒரு மாத கால அவகாசம் கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…