வாராக்கடன் பிரச்சினையிலும், பண மோசடிலும் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து வாராக்கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூரின் டெல்லி, மும்பை இல்லங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் பல கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறையினர் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2,450 கோடி ரூபாய் மூலதனத்தில், யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை தலா 2 ரூபாய் வீதம் வாங்க உள்ளது. இந்த பணிகளை வரும் ஏப்ரல் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் வரை இம்மாதத்தில் வாடிக்கையாளர்கள் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. யெஸ் வங்கி மட்டுமின்றி இதர ஏடிஎம்களிலும் பணத்தை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…