கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பானமையை நிரூபித்தார் எடியூரப்பா.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி நடைபெற்று வந்தது.அந்த சமயத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கடிதம் அளித்தனர்.
இதனையடுத்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தோல்வி அடைந்தது.இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னர் எடியூரப்பா நான்காவது முறையாக எடியூரப்பா பதவி ஏற்றார்.
பதவி ஏற்ற பின்னர் இன்று தனது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்தார்.ஆனால் நேற்று சபாநாயகர் நேற்று ராஜினாமா கடிதம் அளித்த 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இன்று கர்நாடக சட்டப்பேரவை நடைபெற்றது.இதில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றுள்ளது.பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா.105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…