போது மேடையில் வைத்து முதலமைச்சரை மிரட்டும் சாமியார்.. சட்டம் சாமியாருக்கு பின் தானா? வினவும் பொதுமக்கள்..

- கர்நாடகா முதலமைச்சரை பொது மேடையில் வைத்தே மடாதிபதி மிரட்டும் வகையில் பேச்சு.
- இந்த பேச்சால் இந்திய அரசியலில் பெரும் பரபரப்ப.
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வசனாநந்தா என்பவர், தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கா விட்டால், ஒட்டுமொத்த பஞ்சமாஷாலி சமுதாயமும் உங்களை புறக்கணித்து விடும் என்று முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, இருக்கையை விட்டு எழுந்து இது போன்று பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதியிடம் கூறினார். ஆனாலும் அந்த மடாதிபதி, முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து அமைதியாக இருக்கையில் போய் அமரும்படி மிரட்டும் வகையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்வரையே மிரட்டும் சாமியாரால் அரசியல் வட்டாரம் அதிர்ந்து போய் உள்ளது.