சொகுசு ஹோட்டலில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா !
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல் .ஏக்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
ஆனால் எம்.எல் .ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று கொள்ளவில்லை . ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவு விட வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் 15 எம்.எல் .ஏக்களும் மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடந்த முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார்.இதையடுத்து பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ள பாஜக எம்.எல் .ஏக்களை சந்திக்க சென்ற முன்னாள் முதல்வரும் ,கர்நாடக மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா ஹோட்டலில் உள்ள மைதானத்தில் மகிழ்ச்சியாக சக எம்.எல் .ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடினர்.
எடியூரப்பா கிரிக்கெட் விளையாடியது ஆளுங்கட்சி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.