யாஸ் புயல் காரணமாக இன்று மற்றும் நாளை ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அரசு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நாளை புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 185 கீ.மீவேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், யாஸ் புயல் காரணமாக இன்று மற்றும் நாளை ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அரசு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மயூர்பஞ்ச், ஜாஜ்பூர், கட்டாக், கோர்டா மற்றும் பூரி ஆகிய இடங்களில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜகத்சிங்க்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பாலசூர் மீது நாளைக்கு 150-160 கிமீ வேகத்தில் 180 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அடுத்த 12 மணி நேரத்தில் யாஸ் சூறாவளி புயல் ஒரு ‘மிகக் கடுமையான சூறாவளி புயலாக’ தீவிரமடையப் போகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…