யாஸ் புயல் வரும் 26 ஆம் தேதி கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்.!!

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள யாஸ் புயல் வரும் 26ல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாறும். யாஷ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல் நாளை வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அதன் பின் வருகின்ற 26ஆம் தேதி ஒடிசா பங்களாதேஷ் இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த மூன்று நாட்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025