யாஸ் புயல் : ஒடிசா, மேற்கு வங்கத்தில் சூறைக்காற்றுடன் கனமழை..!!
அதிதீவிர யாஸ் புயல் கரை கடக்க தொடங்கியது இதனால் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி ஒடிசா அருகே வங்கக்கடலில் இன்று கரையை கடக்க தொடங்கியது. தாம்ரா – பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது. கரையை கடக்கும் போது 155 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
மேலும் யாஷ் புயல் ஒடிசா-மேற்குவங்கம் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது. இந்நிலையில் புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்கிறது.
புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் சந்திபூர், பாரதீப், தம்ரா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.