யாஸ் புயல் எதிரொலியால் ஜார்கண்ட், ராஞ்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே நேற்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில், நேற்று மாலை யாஸ் புயல் தீவிர புயலாக வலுவிழந்தது. மேலும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறக்கூடும் என்று தெரிவித்தது.
புயல் கரையைக் கடக்கும்போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும், தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
தீவிர புயலாக இருந்த யாஸ், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளது. வலுவிழந்த யாஸ் புயல், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தை கடந்து வருகிறது. இதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், யாஸ் புயல் எதிரொலியால் ஜார்கண்ட், ராஞ்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை அப்டியே நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…