இனி இந்த வேகத்தில் தான் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்!
நொய்டா முதல் ஆந்திரா வரை செல்லக்கூடிய யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் மூடுபனி காரணமாக டிசம்பர் 15 முதல் 2021 பிப்ரவரி 15 வரை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம், மணிக்கு 80 கிலோமீட்டராக குறைக்கப்படும்.
கிரேட்டர் நொய்டாவில் தொடங்கும் யமுனா அதிவேக நெடுஞ்சாலை, ஆந்திரா மாநிலம், குபர்புரில் நிறைவடைகிறது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும் காரணத்தினால் பல விபத்துகள் நடந்துள்ளது. தற்பொழுது குளிர் காலம் தொடங்கியதால் அந்த சாலையில் மூடுபனி சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமமாக இருக்கிறதாக கூறப்படுகிறது.
தொடர் விபத்துக்கள் காரணமாகவும், மூடுப்பனியால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவரும் காரணமாக யமுனா சாலையில் வாகன வேகத்தை குறைக்கு யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) முடிவு செய்துள்ளது. அதன்படி சிறிய வாகனங்களின் வேகம் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கனரக வாகனங்கள் 25 சதவீதம் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த வேகக்குறைப்பு, டிசம்பர் 15 முதல் 2021 பிப்ரவரி 15 வரை அமலில் இருக்கும். அதாவது, 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் சிறிய வாகனம், மணிக்கு 80 கிலோமீட்டராகக் குறைக்கப்படும் எனவும், மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் கனரக வாகனங்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராகக் குறைக்கப்படும் என YEIDA தலைமை நிர்வாக அதிகாரி அருண் வீர் சிங் கூறினார். அதுமட்டுமின்றி, ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்கவும், அதிகாலையில் ஓய்வெடுக்க டோல் பிளாசாக்களில் பயணிகளுக்கு தேநீர் ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.