நாடு முழுவதும் பரவும் ஓமிக்ரானின் XBB வகைகள்.. – மத்திய சுகாதார அமைச்சகம்
ஓமிக்ரானின் XBB வகை தொற்று பரவல் இந்தியா முழுவதும் பரவுகிறது என்று INSACOG தகவல்.
கொரோனா மாறுபாடு ஓமிக்ரான் மற்றும் அதன் துணை வகைகளில் இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ‘XBB’ நாடு முழுவதும் பரவி வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் INSACOG தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு தொடர்பான (INSACOG) புல்லட்டின் வெளியிடப்பட்டது. அதில், BA.2.75 மற்றும் BA.2.10 ஆகிய வகை இருந்தன, ஆனால் குறைந்த அளவில் இருந்தது.
குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவில், BA.2.75 என்பது நடைமுறையில் உள்ள துணை வகையாகும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் BA.2.75 மற்றும் BA.2.10 ஆகிய நோயின் தீவிரம் அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு எதுவும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் மற்றும் அதன் துணை வகையில்இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
XBB என்பது இந்தியா முழுவதும் பரவியுள்ள உள்ள (63.2 சதவீதம்) மிகவும் பொதுவான துணை வகையாகும். ஒட்டுமொத்த தொற்று விகிதம் ஒரு நாளைக்கு 500 க்கும் குறைவாக இருப்பதாக INSACOG தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்குப் பகுதியில், XBB பரவலாக இருந்தது, கிழக்குப் பகுதியில், BA.2.75 என்பது பரவலான துணை வகை பரவலாக இருந்தது.
எனவே, ஓமிக்ரான் மற்றும் அதன் துணை வகையில் இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 46.5 சதவீதத்தில் BA.2.75 மற்றும் 35.8 சதவீதத்தில் XBB மற்றும் அதன் துணை வகைகள் பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஓமிக்ரான் துணை வகைகயாக தொடர்கின்றன. XBB மற்றும் XBB.1 தொடர்பான நிலைமையை INSACOG கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.