Categories: இந்தியா

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

Published by
கெளதம்

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB) மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து முதன்முறையாக X குரோமோசோம் (TEX13B) மரபணு ஆண்களின் விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறிந்துள்ளனர்.

ஆய்வின் படி, ஏழு ஜோடி ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு சமீபத்தில் மனித இனப்பெருக்கம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஏழு ஜோடி ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், TEX13B என்கிற மரபணுவில் இரண்டு காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று மலட்டுத்தன்மையுள்ள ஆணிடம் மட்டுமே கண்டறியப்பட்டது. மற்றொன்று கருவுற்ற கட்டுப்பாட்டு ஆண்களுடன் ஒப்பிடும்போது மலட்டுத்தன்மையுள்ள ஆணிடம் இது தென்பட்டுள்ளது.

X chromosome gene [Image source : MedlinePlus]
இது ஒன்றாக சேர்ந்து, புதிய விந்தணுக்களின் உருவாக்கத்தை பாதிக்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், CRISPR-Cas9 என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Tex13b மரபணுவை நாக் அவுட் செய்து, சுறுசுறுப்பான விந்தணுக்களை உருவாக்கும் செல்களின் மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், X குரோமோசோம் மரபணு இழந்த செல்களின் சுவாசத் திறனைக் குறைக்கிறது என்றும், TEX13B விந்தணுக்களை உருவாக்கும் உயிரணுக்களில் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆய்வின்படி விந்தணுக் குறைபாடுள்ள மலட்டுத்தன்மையுள்ள ஆண்களை எளிதாக கண்டறியவும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். TEX13B மரபணு X குரோமோசோமில் உள்ளதாம். அதாவது CCMB-ன் இயக்குநர் வினய் குமார் நந்திகூரி இது பற்றி விவரிக்கையில், “X குரோமோசோம் மரபணுவானது அனைத்து ஆண்களும் தங்கள் தாயிடமிருந்து மட்டுமே பெறுகிறார்கள், அவர்களது தந்தையிடமிருந்து இல்ல.

X chromosome gene study [Image source : The Times]
தவறான ‘TEX13B’ மரபணுவை சுமந்து செல்லும் தாய் கருவுறக்கூடியவர் என்று அர்த்தம். ஆனால், தாய் X குரோமோசோமை தவறான TEX13B உடன் சுமந்து செல்லும் பொழுது, ​​மகன் மலட்டுத்தன்மையடைகிறான். ஆண் மலட்டுத்தன்மைக்கு இது ஒரு அடிப்படைக் காரணமாக இருக்கும்” என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

39 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

43 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago