வாலிபர் ஒருவர் தனக்கு கொரோனா தாக்கியிருப்பதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும் 14 ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், அதனை நீடிப்பதாக தகவல் வந்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரசுக்கு பயந்தே பலர் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வைரசுக்கு பயந்து பலர் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டு வருகின்றனர்.
அதுபோன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. நாசிக் மாவட்டம் செகேடி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பிரதிக் ராஜூ குமாவத் என்பவர் தொண்டை நோயால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, தொண்டை நோய் காரணமாக கடுமையான இருமலால் அவதிபட்டு வந்த ராஜீ குமாவத் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று பயந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், ராஜீ குமாவத் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன் அந்த வாலிபர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் தன்னை கொரோனா தாக்கியதாக கருதுவதால், தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…