பதக்கங்களை கங்கையில் வீச ஹரித்வாரை அடைந்த மல்யுத்த வீரர்கள்..!

WrestlersinGanga

மல்யுத்த வீரர்கள் தங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசுவதற்காக ஹரித்வாரை அடைந்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி – ஜந்தர் மந்தர் பகுதியில் 35 நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர்.

கடந்த ஞாயிற்று கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை தடுத்து காவல்துறையினர் தடுத்து கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

மேலும், அப்பகுதியில் அமைத்திருந்த குடில்களை அகற்றி, மீண்டும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, நாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது WFI தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக மல்யுத்த வீரர்கள், நாட்டிற்காக தங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசுவதற்காக ஹரித்வாரை அடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்