தடையாக இருந்தால் வேலையை விட்டுவிடுவோம் – மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு.!

Sakshee Malikkh

மல்யுத்த வீராங்கனைகள் நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு தடையாக, இருந்தால் வேலையை விட்டுவிடுவோம் என மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகட் உள்ளிட்ட பலர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலையை விட்டுவிடுவோம்:

இந்நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீராங்கனை சாக்க்ஷி, புனியா, வினேஷ் ஆகியோர் தங்கள் பணிக்கு திரும்பினர். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த தகவல் உண்மையில்லை என்று அவர்கள் விளக்கமளித்தனர்.

WrestlersinGanga
WrestlersinGanga [Image Source : Twitter/@Bhawnap60686247
]

சாக்ஷி மாலிக் தனது டிவிட்டரில், எங்கள் பதக்கங்கள் ஒவ்வொன்றும் 15 ரூபாய் என்று சொன்னவர்கள் இப்போது எங்கள் வேலையைப் பின்தொடர்கிறார்கள். நீதியின் வழியில் வேலை தடையாக இருப்பதைக் கண்டால், அதை விட்டு வெளியேற பத்து வினாடி கூட எடுக்க மாட்டோம். வேலை பயத்தை காட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அமித்ஷாவுடன் சந்திப்பு:

இதற்கிடையில், மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பு 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்துள்ளது. இந்த பஜ்ரங் புனியா சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி உள்ளனர்.

wrestlers protest
wrestlers protest [Image Source : Jagran English]
போராட்டத்தை கைவிட்டார் சாக்ஷி மாலிக்?

இந்த சந்திப்பையடுத்து, சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டார் என்றும், போராட்டத்தை கைவிட்ட அவர் மீண்டும் தனது ரயில்வே பணியில் இணைந்தார் என்றும் செய்திகள் வெளியான நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

WrestlersProtest medals
WrestlersProtest medals [FileImage]
வதந்திக்கு தரமான பதிலடி:

இதுகுறித்து சாக்ஷி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போராட்டத்தை கைவிடவில்லை. நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவலை பரப்ப வேண்டாம். நீதிக்கான போராட்டத்திலிருந்து யாரும் பின் வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம்’ என ட்வீட் செய்து இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்