டெல்லியில் மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்ததற்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இதற்கிடையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.
போலீசார் வைத்திருந்த தடுப்புகளைத் தாண்டி, மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி செல்ல முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்பின், மல்யுத்த வீரர் சக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உட்பட மல்யுத்த வீரர்கள் பலரை போலீசார் பலவந்தமாக கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இதற்கு பல தரப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்துவந்த நிலையில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கைது செய்யும் வீடியோவை பதிவு செய்து, முடி சூடும் விழா முடிந்ததும் மக்களை நசுக்கும் பணித் தொடங்கியுள்ளது. என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, பிரதமர் நாடாளுமன்ற திறப்பு விழாவை பிரதமர் மோடி முடிசூட்டு விழாவாக நினைத்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…