நாங்களும் உங்கள் மகள்கள் தான்.. உங்கள் ஆதரவு வேண்டும்.! பாஜக எம்.பிக்களிடம் வேண்டுகோள் வைத்த வீராங்கணை.!
மல்யுத்த வீரங்கனைகள் பாஜக எம்.பி.க்களின் மகள்கள் போன்றவர்கள். – மல்யுத்த வீரங்கணை வினேஷ் போகட்.
டெல்லியில் ஜந்தர் மாந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே இந்திய மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உ.பி பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேள தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றசாட்டுகளை முன் வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே, பிரிஜ் பூஷன் சிங் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பலர் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர் .
இந்த போராட்டம் குறித்து பேசிய மல்யுத்த வீரர் வினேஷ் போகட், பெண் மல்யுத்த வீரங்கனைகள் பாஜக எம்.பி.க்களின் மகள்கள் போன்றவர்கள் என்றும், மல்யுத்த வீரர்கள் தங்கள் கவுரவத்துக்காக போராடுகிறார்கள். உங்களில் சிலராவது எங்களுக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.என்றும் வினேஷ் போகட் கூறினார்.