அரசு என்ன கூறினாலும் அதனை அப்படியே ஏற்று கொள்ள மாட்டோம்.! மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் திட்டவட்டம்.!
அரசு என்ன கூறினாலும் அதனை அப்படியே ஏற்று கொள்ள மாட்டோம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.
மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்சருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பேசுகையில், இன்னும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை. அரசு சார்பில் கூறப்படும் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனை எங்கள் போராட்ட வீரர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் போராட்டத்தை கைவிடுவது பற்றி ஆலோசிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.