பிரிஜ் பூஷன் சிங் தான் குற்றவாளி என தெளிவாக தெரிகிறது.! சாக்ஷி மாலிக் வேதனை.!
பிரிஜ் பூஷன் சிங் தான் குற்றவாளி என தெளிவாக தெரிகிறது என வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டினார்.
மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றசாட்டுகளில் சிறுமி கொடுத்த போக்ஸோ புகாருக்கான போதிய ஆதாரங்கள் இல்லை என டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இது குறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீராங்கனை சக்ஷி மாலிக் கூறுகையில், அவர் (பிரிஜ் பூஷன் சிங்) குற்றவாளி என்று தெளிவாக கூறுகிறது. என்று குறிப்பிட்டார். மேலும், எங்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை விவரங்கள் குறித்து தகவல்கள் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நாங்கள் குற்றச்சாட்டுகளை கண்டுபிடிக்க முடியும். அதன் பிறகு, அந்த குற்றச்சாட்டுகள் சரியானதா இல்லையா என்பதை நீதிமன்றம் கூறும் என சாக்ஷி மாலிக் கூறினார் .