13 பேருடன் காணாமல் போன விமானம் !விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு ?
காணாமல் போன ஏ.என்.32 ரக போர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது.
காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி 6 -வது நாளாக தீவிரமாக நடைபெற்று வந்தது.ஆனால் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.