உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை; கர்நாடகாவில் பிரதமர் மோடி திறந்து வைப்பு.!
கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ சித்தரூத்த சுவாமிஜி ஹூப்பள்ளி நிலையத்தில் உள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்காக அர்ப்பணித்தார். 1,507 மீட்டர் நீளமுள்ள இந்த நடைமேடை சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடைபெற்ற விழாவில் பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலையை நாட்டுக்காக அர்ப்பணித்து திறந்து வைத்தார்.
Prime Minister @narendramodi dedicates to the nation the longest railway platform in the world at Shree Siddharoodha Swamiji Hubballi Station.@RailMinIndia @AshwiniVaishnaw pic.twitter.com/nTZMOFVDFD
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) March 12, 2023