டெல்லியில் 10,000 படுக்கைகள் கொண்ட பிரமாண்டமான மருத்துவமனை திறப்பு.!
டெல்லியில் பிரமாண்டமான 10,000 படுக்கைகள் கொண்ட சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்தை இன்று திறந்து வைத்தனர்.
சாதாரண அறிகுறியற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த மையம் டெல்லியின் சதர்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கு வீட்டு தனிமைப்படுத்த முடியாதவர்களுக்கு இது ஒரு சிகிச்சை மையமாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் 1,700 அடி நீளம், 700 அடி அகலம் – தோராயமாக 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டுள்ளது அது மட்டுமில்லை 200 படுக்கைகள் ஒவ்வொன்றும் 50 படுக்கைகள் கொண்டவை. இது உலகிலேயே மிகப் பெரியது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள டி.ஆர்.டி.ஓ-கட்டப்பட்ட சர்தார் வல்லப் பாய் படேல் கொரோனா மருத்துவமனைக்கு வருகை தந்தனர். மேலும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டிஆர்டிஓ தலைவர் ஜி சதீஷ் ரெட்டி ஆகியோரும் கலந்து இந்த விழாவில் கொண்டனர்.
மேலும் டி.ஆர்.டி.ஓ, உள்துறை அமைச்சகம், டாடா சன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பல அமைப்புகளின் ஆதரவுடன் கொரோனா நோயாளிகளுக்கான 1000 படுக்கைகள் கொண்ட இந்த தற்காலிக மருத்துவமனை வெறும் 12 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது. WHO வழிகாட்டுதல்களின்படி 250 க்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் இங்கு இருக்கிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார.
Delhi: ITBP is the nodal agency to operate the 10,000 bedded Sardar Patel COVID Care Centre&Hospital at Radha Soami Beas in Chattarpur.
Delhi has a total of 97,200 COVID19 cases incl 68,256 recovered cases& 25,940 active cases, as per the last bulletin of Delhi Health Dept. pic.twitter.com/NW43dkxlMJ
— ANI (@ANI) July 5, 2020
டெல்லியில் ஒரே நாளில் 2,505 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97,200 ஆக அதிகரித்துள்ளது.ஒரே நாளில் 2,632 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 68,256 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 70.22 சதவீதமாக அதிகரித்துள்ளது.