உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆரம்பம்! முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திராவில் 25, தெலுங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் உள்ள 8 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்கரில் 1, காஷ்மீரில் 2, மகாராஷ்டிராவில் 7 இடங்களுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.
சிக்கிம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுராவில் தலா 1 தொகுதியிலும், மேகாலயாவில் 2, ஒடிசாவில் 4 இடங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.