மக்கள் தொகை பெருக்கம் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பாதிப்புகளை ஏற்படுத்துமா?!

Default Image

ஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது அந்நாட்டின் நிதி நிலைமை மட்டுமல்ல, அந்நாட்டின் மக்கள் தொகையும் முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ஒரு நாட்டின் மக்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, சுகாதாரம் என அனைத்தும் சரிவர கிடைத்திருக்க வேண்டும். அதனை சரி செய்வதே மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது.

உலக ஏழைகள் விகிதத்தில் 24 சதவீத ஏழைகள் இந்தியாவில் தான். இருக்கிறார்கள். என்பது வருந்தத்தக்க செய்தியாக இருக்கும் அதே வேளையில், உள்நாட்டு உற்பத்தி அதிகம் உள்ள நாடுகளில் உலகளவில் 5ஆம் இடத்தில இந்தியா உள்ளது. இந்தியாவில் இருக்கும் 1 சதவீத பணக்காரர்களிடமே இந்திய செல்வத்தில் 58 சதவீதம் இருக்கிறது. இந்த சதவீத மாறுபாடு இந்தியாவில் தீவிர ஏற்ற தாழ்வு இருப்பதை பகிரங்கமாக சுட்டி காட்டுகிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தற்போது 133 கோடி உள்ள நமது நாட்டு மக்கள் தொகை 2050 இல் 27.3 கோடி அதிகரித்து விடும் என்ற அதிர்ச்சி தகவலும், 2027இல் மக்கள் தொகையில் முதலிடம் பிடித்த சீனாவை முந்திவிடும் என ஓர் முன்னனி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், மக்கள் தொகையை எதிர்த்தும் மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் குடும்ப கட்டுப்பாடு குறித்து பல விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை மக்களிடம் பலவாறு புகுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இரு வழிகளில் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுகிறது. இதில் தற்காலிகம் மற்றும் நிரந்தர குடும்ப கட்டுப்பாடு என இரு வழிகளில் செய்யப்படுகிறது. இந்த குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு இந்தியாவில் பீகார், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்னும் சரிவர குடும்ப கட்டுப்பாடு மக்களிடம் போய் சேரவில்லை என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்