உலக மக்கள் தொகை தினம் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1987 ஆம் ஆண்டில் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை 500-கோடியை தாண்டியது.இதனால் 1987-ஆம் ஆண்டு ஜூலை 11 -ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது.
இதிலிருந்து ஆண்டு தோறும் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.மக்கள் தொகையை பொருத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது.2019 -ஆண்டு ஐ.நாவின் ஆய்வறிக்கையில், சீனாவின் மக்கள் தொகை 143 கோடியாக உள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாக உள்ளது.மேலும் உலக மக்கள் தொகை 770 கோடி ஆகும்.
ஆனால் வரும் 2050 ஆண்டு முதல் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 27.3 கோடி அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2050 -ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 164 கோடியாக அதிகரிக்கும்.சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…