கட்டாய உடலுறுப்பு தான மசோதா நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்.! – பாஜக எம்பி தகவல்.!
இந்தியாவில் உடலுறுப்பு தானமானது விருப்பமுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் விருப்ப தேர்வாக உடல் உறுப்பு தனம் இருக்கும் எனவும், இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என பாஜக எம்பி தெரிவித்தார்.
நேற்று உலக உடலுறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பாஜக எம்பி வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அதில், உடல் உறுப்பு தானம் பற்றிய மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் பலரது உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் பற்றிய மசோதாவை இவர் பாராளுமன்றத்தில் தாக்கல் வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யஉள்ளார். இந்த மசோதா ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மாதம் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.
உடல் உறுப்பு தானத்தை கட்டாயமாக்க அதற்கு வலுவான கொள்கைகள் இந்தியாவில் இல்லாததால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 2 லட்சம் சிறுநீரகங்கள், 50,000 இருதயங்கள் மற்றும் 50000 மாற்று கல்லீரல்கள் ஆகியவை தேவைப்படுவதாக அவர் கூறினார். இறந்தவர்களிடம் இருந்து உறுப்பு தானம் மிகவும் குறைவாகவே எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் உடலுறுப்பு தானமானது விருப்பமுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. அதற்கு பதிலாக தற்போதைய மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் விருப்ப தேர்வாக உடல் உறுப்பு தனம் இருக்கும் எனவும், இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என அவர் தெரிவித்தார். இதன்மூலம் உறுப்பு தானத்தின் நன்கொடையாளர்களின் வீதத்தை அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
I will be introducing a private member’s bill that proposes to put all adult citizens in a national organ donation register, which anyone can voluntarily opt out off. This will ensure a reduction in the number of deaths due to non-availability of organs. #OrganDonationDay
— Varun Gandhi (@varungandhi80) August 13, 2020