உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸுக்கு புதிய பெயர் சூட்டிய பிரதமர்..!
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் மூன்று நாள் பயணமாக குஜராத் வந்துள்ள்ளார். குஜராத்தில் உள்ள ஜாம் நகர் பகுதியில் உலக சுகாதார அமைப்பின் பிரம்மாண்டமான மருத்துவ மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நேற்று பிரதமர் மோடி அவர்கள் நாட்டி இருந்தார்கள்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்திக்கும் பொழுதெல்லாம் நான் இந்த அளவில் இருப்பதற்கு காரணம் இந்தியாவின் ஆசிரியர்கள் தான். மேலும் இந்தியாவுடன் இணைந்து இருப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இன்று என்னை சந்தித்த பொழுது நான் பக்கா குஜராத்தி ஆகிவிட்டேன். எனவே எனக்கு ஒரு நல்ல குஜராத்தி பெயரை வைத்து விடுங்கள் என என்னிடம் கூறியிருந்தார். மேலும் தற்போது மேடையிலும் அவர் எனக்கு அதை நியாபகப்படுத்தினார். எனவே அவருக்கு மகாத்மா காந்தியின் புனித பூமியில் ஒரு குஜராத்தி என்பதால் துளசி பாய் எனும் பெயரை வைத்துள்ளேன்.
துளசி பாய் என்பது இளைய தலைமுறையினரால் மறக்கப்பட்ட ஒரு தாவரம். ஆனால் பல தலைமுறைகளாக இந்தியர்களின் வீடுகளில் வைத்து வழிபடக் கூடிய ஒரு தாவரம். மேலும் அது இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திலும் மிக முக்கியமானது. எனவே அவருக்கு அந்தப் பெயரை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.