இந்தியாவில் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் 27 வயதுக்கு உட்பட்ட இளம் உழைப்பாளிகளின் எனக் கூறியுள்ள அவர், உலகிலேயே ஆங்கிலம் அதிகம் பேசும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இணையதளப் பயன்பாட்டின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், 4-வது தொழில் புரட்சியான செயற்கை நுண்ணறிவு மூலமான தொழில்நுட்பப் புரட்சியை வடிவமைப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.