காந்தி திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் உலகம் மகாத்மாவை அறிந்திருக்கவில்லை.. பிரதமர் மோடி பேட்டி.! 

PM Modi - Gandhi (1982) Film

மகாத்மா காந்தி: 1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் வரையில் மகாத்மா காந்தி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை – பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாத்மா காந்தி பற்றியும், அவரை இந்திய தலைவர்கள் உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்த தவறிவிட்டனர் என்றும் கூறி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் அந்த பேட்டியில் கூறுகையில், மகாத்மா காந்தி ஒரு சிறந்த மனிதர், சுதந்திரத்திற்கு பிந்தைய கடந்த 75 ஆண்டுகளில், ஓர் சிறந்த தலைவரை உலகம் அளவில் அங்கீரம் பெறவைத்திருக்க வேண்டியது நமது இந்திய அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். ஆனால் கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகள் அதனை செய்ய தவறிவிட்டன.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது கொள்கைகள் சினிமா சித்தரிப்புகளால்தான் உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை போல மகாத்மா காந்தியை உலகம் முழுக்க அறிந்திருக்க இந்தியா சிறப்பாக உழைத்து இருக்க வேண்டும். இந்தியாவில் நிலவிய பல பிரச்சனைகளுக்கு மகாத்மா காந்தி ஓர் தீர்வாக இருந்துள்ளார்.

தயவுசெய்து மன்னிக்கவும். முதன்முறையாக 1982ஆம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான காந்தி திரைப்படம் படம் எடுக்கப்பட்ட பின்னர் தான் உலகம் மகாத்மா காந்தியை பற்றி நன்கு அறிந்து கொண்டது என அந்த பேட்டியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் பென் கிங்ஸ்லி நடிப்பில் 1982ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் காந்தி. இந்த திரைப்படம் அப்போது 8 ஆஸ்கர் விருதுகளை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்