உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்த, 105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு வங்க உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் இட மேம்பாட்டு திட்டம் ஆகியவை ஹூக்ளி ஆற்றில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், கொல்கத்தா செல்வதற்கான வசதியை மேம்படுத்த இடவசதியைத் திட்டமிடவும், கொல்கத்தா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மாநில தளவாட துறை வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும்.
இந்த ஒப்பந்தத்தில், மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் மொகபத்ரா, மேற்கு வங்கம் சார்பில் துணை ஆணையர் ராஜ்தீப் தத்தா, உலக வங்கி சார்பில் அதன் இந்தியப் பிரிவு இயக்குனர் ஜூனைத் அகமது ஆகியோர் கையெழுத்திட்டனர்.இத்திட்டம், மேற்கு வங்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அல்லது 30 மில்லியன் பேர் வசிக்கும் கொல்கத்தா மெட்ரோ பகுதி உட்பட இந்தத் திட்டம் மக்கள் தொகை அதிகம் உள்ள மேற்கு வங்கத்தின் 5 தென் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…