தனிமைக்கு பயந்து.! ஓடும் ரெயிலில் இருந்து குதித்த தொழிலாளர்கள்.!

பெனகாடியா என்ற ஊரில் உள்ள ஒரு பாலத்தின் மீது ரயில் மெதுவாகச் சென்றபோது, இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து தப்பி ஓடினர்.
இந்தியாவில் இதுவரை மொத்தமாக 67,152 பாதிப்புகளும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் மூலம் தொழிலாளர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரயில், பெனகாடியா என்ற ஊரில் உள்ள ஒரு பாலத்தின் மீது மெதுவாகச் சென்றபோது, இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து தப்பி ஓடினர்.
பின்னர், அந்த ஊர்மக்கள் 7 பேரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கீழே குதித்தவர்களில் 20 பேர் தப்பிச் சென்றுவிட்டனர். ஒடிசாவில் வெளிமாநிலத் தொழிலாளர்களை 28 நாட்கள் முகாமில் தனிமையில் வைப்பது கட்டாயமாகி உள்ளது. இதனால் தான் தொழிலார்கள் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து உள்ளனர்.
ஒடிசாவில் கொரோனாவால் 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 63 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 2 உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 10 மாநிலங்களில் ஒடிசா மாநிலமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025