வெளிமாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் அழைத்துக்கொள்ளலாம்.!
ஊரடங்கு காரணமாக வெளிமாநிலதிற்கு வேலைக்கு சென்று தற்போது வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் திருப்பி அழைத்து கொள்ளலாம். – மத்திய உள்துறை அமைச்சகம்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலையின்றியும் தங்கள் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமலும் தவித்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, வெளிமாநிலதிற்கு வேலைக்கு சென்று தற்போது வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் திருப்பி அழைத்து கொள்ளலாம்.
இந்த திருப்பி அழைக்கும் நடைமுறையானது இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு நிகழவேண்டும். தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.