புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர் திரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 3-ஆம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்த பகுதியில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று வருகின்றனர்.
இதனிடையே தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசத்தை நோக்கி சில தொழிலாளர்கள் நடந்தே சென்றனர். நடந்துசென்று சோர்வு காரணமாக அந்த தொழிலாளர்கள் இரவு நேரத்தில் தண்டவாளத்தில் உறங்கிய போது அவர்கள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.அதாவது,தண்டவாளம் வழியாக நடந்து செல்வது வேதனை அளிக்கிறது.ஏற்கனவே பேருந்துகள் மற்றும் ஷார்மிக் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர் திரும்புவதை அனுமதிக்க வேண்டாம். தொழிலாளர்களுக்கான ஷார்மிக் ரயில்கள் இயக்கத்திற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…